Sunday, October 27, 2013

வனவாசம்!



நீண்ட நாள் கழித்து என் வலைப்பதிவிற்கு வருகிறேன்.
வனவாசத்தின் அனுபவங்களோடு...


அவன் என்று குறிப்பிட்டது புத்தகத்தின் தலைவன் கண்ணதாசன் அவர்களை. இவன் வாசித்தவன்.

சிரிப்பால் அவன் அவமானமடைந்ததை அறிந்து இவன் வருத்தப்பட்டான். முதல் கதையோடு அவன் சந்தித்த அவமானச்சிரிப்பு இவனுக்கும் மறக்கமுடியாது.

சென்னையில் அவன் தனியாக திரிந்த போது, இவனுக்கு பசித்தது. Tram வண்டியில் அவனுக்கு கிடைத்த பெண்ணின் அன்பு இவனுக்கு கிடைத்தது போல இருந்தது. நினைக்காத உறவு நிலையாமல் போனது.

 
உற்றார் உளன்களிக்க,
ஊரார் வாயடைக்க
பெற்றார் உடன்வந்து
பேதையெனைக் காவீரோ!

என்ற காதலியின் ஏக்கத்தை திருமகளில் அவன் வரைந்ததை இவன் சுவைத்தான்.குடியரசு, தென்றல், சேலம் Modern theatres பணிகளில் அவன் கற்ற அனுபவங்கள் இவனுக்கு பாடம்.

அண்ணாவின் பேச்சால் அவன் இழுக்கப்பட்ட போது இவன் வியந்தான். ஆனால், அவன் வாசம் செய்த வனத்தில் திமுக எனும் குடிலில் நடந்த சம்பவங்களை அவன் மூலமாக இவன் கண்டபோது கொதித்தெழுந்தான்.
விலை மாதுவிடம் 150 ரூபாயை வியாபார தந்திரமாக ஏமாற்றி வெற்றிகண்ட திமுக கலாரசிகரின் செயலை அவன் வருணித்த போதும் இவன் கோபப்பட்டான்.சுயமரியதைக்கொள்கைகளுக்காக பார்ப்பனர் எனும் பொது எதிரியை சித்தரித்து திமுக மட்டுமில்லாமல், அவனும் தெய்விக மறுப்பையே பெருமையாக கொண்டிருந்தான். அவன். இயற்கைத் தலைவனை மறந்து செயற்கைத் தலைவன் வசப்பட்டான்.அனால், அவன் சைவ சமுகத்தை சேர்ந்தவன் என்று இவன் அறிந்து கொண்டான்.

சம்பத் அவர்கள் அண்ணாவிற்கு ஆதரவளித்த மிகப்பெரிய தவறினை செய்தது இவன் அறிந்தபோது மிகவும் வருத்தமடைந்தான். வரலாற்றுப்பிழையல்லவா அது! ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற அண்ணாவின் கட்டுரையும், ‘அண்ணாவின் மன்னன்’ என்ற வெட்டுரையும் இவன் படிக்க வேண்டும் என்ற ஆவல்.
கல்லக்குடி போரட்டத்தின் விளைவாக அவன் சிறைவாசம் அனுபவித்தும், வேறு சிலர் பயனடைததையும் இவன் அறிந்து வருத்தப்பட்டான்.
அவனுடைய வனவாசம் வரலாற்றுப்பதிவாகவும் இவனுக்கு அமைந்தது.
இலக்கிய வீதியில் அவன் வலம்வந்தது இவனுக்கு சுவையாக இருந்தது. சிலம்புச்செல்வரிடம் சிலம்பாட்டம் ஆடிய அவனுடைய இலக்கிய ஆராய்ச்சியினை இவன் படித்த போது வியப்புற்றான்.
            மங்கல அணியிற் பிறிதனி மகிழாள்
என்ற இளங்கோவடிகள் கூறுவது இயற்கை அழகே அன்றி தாலி அன்று என்றவன் எடுத்துக்காட்டியது அருமை.
பாவமன்னிப்பாக அவன் வரைந்த கட்டுரையுள் இவன் கண்டது வழிமாறிய சுயமரியாதை தொண்டர்களை! நடிகர்களின் குழப்பம் இன்றும் தொடர்கிறதே!
திமுக எனும் சின்னஞ்சிறிய கூண்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த அந்தப்பறவை, பரந்த வானத்தில் எழுந்து பறக்கத் துவங்கியது. அவனுடைய பத்தாண்டு வனவாசம் அதோடு முடிவுற்றது. அரசியலில் நுழையும் முன்பு இவன் இந்நூலை வாசித்தது நன்மையே!